Air கனடாவில் பயணம் மேற்கொள்வோருக்கு முக்கிய தகவல்
கனடாவில் இருந்து Air கனடா மூலம் இலங்கை, இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு செல்ல தயாராவோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல விமான சேவைகளை ரத்துச் செய்துள்ளதாக ஏர் கனடா அறிவித்துள்ளார்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விமான பணியாளர்கள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விமான சேவை
விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக விமான சேவைகளை இரத்து செய்ய Air கனடா முடிவு செய்துள்ளது.
இன்று முதல் படிப்படியாக விமான சேவைகளை நிறுத்த ஆரம்பித்து, வார இறுதிக்குள் சேவைகள் முழுமையாக தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஏர் கனடா அறிவித்துள்ளது.
இந்த பாரிய தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




