வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
பொதுப் போக்குவரத்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமைய, தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து அல்லாத வாகனங்கள்
இதன்படி,பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், கொள்கலன் வாகனங்கள், பாரவூர்திகள், பால் போக்குவரத்துக்கான தாங்கி ஊர்திகள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கான இறக்குமதி தடைகளை தளர்த்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்படாத பொதுப் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
