மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
முறைகேடுகள் இடம்பெற்றதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்யும் வசதியை தொடர்வது தொடர்பில், இறுதித் தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் வாகனங்களை குறைத்து மதிப்பிடுதல் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக திறைசேரி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
முதற்கட்ட சுங்க அறிக்கைகளின்படி, இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 119 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 75 வாகனங்கள் ஒரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
