அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்
டிசம்பர் மாத பண்டிகை காலத்துக்காக 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று(20.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த தீர்மானத்தின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் அரிசியை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து கொல்லும் பெரும்பான்மையினத்தவர்: சாணக்கியன் குற்றச்சாட்டு (Video)
விலைக் கட்டுப்பாடு
கீரி சம்பா மற்றும் சம்பாவிற்கு பதிலாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் மூலம் விலையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் தொகையை அதிகரிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விலையேற்றம் நீண்டகாலமாக பாரிய ஆலை உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நிரந்தர தீர்வை வழங்குவது தொடர்பில் இன்று அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
