இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக சட்டசபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.எனவே அந்த சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம், சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசாங்கம் மறுக்க முடியாது.
அத்துடன் நாட்டுக்கு ஏதிலிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது.
எனவே இந்த சட்டத்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று, இது தொடர்பான யோசனையை முன்வைத்து உரையாற்றிய, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு, இந்த சட்டம் உகந்ததாக இல்லை. எனவே இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தமது உரையின் போது கோரிக்கை விடுத்தார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri