ரஷ்ய - உக்ரேன் மோதல்! இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்படவுள்ள பெரும் பாதிப்பு
ரஷ்ய உக்ரேன் மோதலின் மூலம் பூகோள ரீதியில் குறுங்கால மற்றும் நீண்டகால தாக்கங்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஹசித் கந்தஉடஹேவா தெரிவித்துள்ளார்.
வலுசக்தி துறைசார்ந்த நெருக்கடிகள் ஏற்படுவதற்கான கூடுதலான சாத்தியங்கள் காணப்படுகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக மேற்குலக நாடுகள் தடைகளை விதிதுள்ள நிலையில் டொலர் பரிமாற்றத்திலும் பாரிய நெருக்கடிகள் ஏற்படலாம்.
இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு இது சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்று கலாநிதி ஹசித் கந்தஉடஹேவா தெரிவித்தார். மேலும் எரிபொருள் தொடர்பான நெருக்கடிகளை பாரிய அளவில் சந்திக்க நேரிடும்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 100 டொலரை கடந்தது. நிலைமை மோசமடைந்தால் அந்த விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படுவதனை அவதானிக்க முடியும்.
ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் தடை விதிப்பதன் மூலம் டொலர் பரிமாற்றத்தில் எதிர்பாராத நெருக்கடி நிலை ஏற்படும். இதன் தாக்கத்தை இலங்கையும் எதிர்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கை பாரிய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இதன் காரணமாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மின்சார விநியோகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை தற்போது வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ரஷ்யா - உக்ரேன் மோதல் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக பொருளியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.