டிட்வாவின் தாக்கம்: புகையிரத திணைக்களத்திற்கு ஏற்பட்ட பாரிய சேதம்
இலங்கையை தீவிரமாக தாக்கிய டித்வா சூறாவளியினால் புகையிரத கட்டமைப்பில் 30 வீதமானவை மாத்திரமே தற்போது பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1,593 கிலோ மீட்டர்களை கொண்ட புகையிரத வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளது என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
சூறாவளியால் ஏற்பட்ட பாரிய சேதம்
இந்த சூறாவளியால், 1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், சுமார் 137,265 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 305 சிறு நீர்ப்பாசன கால்வாய்களும் அழிந்துள்ளன.
நாட்டில் 22 பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு மீட்பு 91 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும் நுவரெலியா மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri