நாட்டின் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக நாட்டின் அந்நிய செலாவணி பற்றாக்குறை அதிகரித்துள்ளது.இதனால் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய,பெருந்தோட்டத்துறை இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் தற்போது இலங்கை தேயிலையின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாகவே தேயிலையின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேயிலையின் உற்பத்தி செலவு 30 தொடக்கம் 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத் துறையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி |
இரசாயன பசளை
இரசாயன பசளை மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டங்கள் இரசாயன பாவனையை குறைத்துள்ளது. இதேவேளை உலகளாவிய ரீதியில் இரசாயன பசளைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக தமது உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத் துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெருந்தோட்டத்துறை இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.