எரிபொருள் விநியோகம் சீரின்மையால் இ.போ.ச ஊழியர்கள் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இ.போ.ச சாலையின் ஊழியர்கள் கடமைகளுக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல முடியவில்லை.
ஆகையால் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கு ஆவண செய்யுமாறு இலங்கை சுதந்திர ஊழியர் சங்க வடமாகாண இணைப்பாளர் ந.கோபி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
எமது சாலைகளுக்கு இன்று, நாளை எரிபொருட்களை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றதே தவிர எவ்விதமான ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதனால் அத்தியாவசிய சேவையை வழங்கும் நாங்கள் எரிபொருள்களை உரிய முறையில் பெற்றுக்கொண்டு சேவையை முன்னெடுக்க முடியவில்லை.
இதனால் தற்போது க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உட்பட அரச சேவையை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் பலர் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே இதனை கருத்தில் கொண்டு இ.போ.ச சாலை உத்தியோகத்தகள் சாரதிகள், காப்பாளர்கள்
அனைவருக்கும் உரிய நேரத்திற்கு எரிபொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு
மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
