இலங்கையில் கொரோனா தொற்று குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
கோவிட் தொற்றுக்குள்ளான 771 பேரின் மரபணு மாதிரி பரிசோதனைக்குட்படுத்திய போது அதில் 16 பேருக்கு இன்புளுவென்ஸா ஏ வைரஸ் தொற்றியுள்ளதென உறுதியாகியுள்ளதென விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டது.
கோவிட் குணமடைந்த பிறகு அவர்கள் அனைவரும் இன்புளுவென்ஸா 'ஏ' வைரஸால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் அச்சமடையும் நிலைமை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் கோவிட் வைரஸ் மற்றும் இன்புளுவென்ஸா வைரஸ் ஒன்றாக தொற்றிய ஒருவரும் இதுவரையில் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் மே மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியினுள் இன்புளுவென்ஸா நோயாளிகள் பாரியளவு அதிகரித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவரால் ரணிலுக்கு ஏற்பட்ட தோல்வி! - காலம் கடந்து வெளியான தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |