அமரர்.முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் தகனம்(Photos)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான அமரர். முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் இன்று (24.11.2022) தீயுடன் சங்கமமானது.
இரங்கல் செய்திகள்
அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் இறுதிக்கிரியைகள் நடைபெற்றுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரின் இரங்கல் செய்திகள், வாசித்துகாட்டப்பட்டுள்ளன.
மூத்த அரசியல் - தொழிற்சங்க வாதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் நேற்று (23.11.2022) காலமானார். அவரின் பூதலுடன் அஞ்சலிக்காக அன்னாரின் நுவரெலியாவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பூதவுடல் தகனம்

பின்னர் இன்று (24.11.2022) இல்லத்திலிருந்து நுவரெலியா நகர் வழியே எடுத்து செல்லப்பட்டு, நுவரெலியாவில் உள்ள கட்சி காரியாலயத்திற்கு கொண்டு சென்று, பின்னர் நுவரெலியா பொது மயானத்தில் மாலை 5.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் ராமேஷ்வரன் உள்ளிட்டோர் கட்சி கொடியை போத்தி கௌரவம் செலுத்தியுள்ளனர்.

இந்திய தூதரக அதிகாரிகளும் இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி இரங்கல் புத்தகத்தில் குறிப்பெழுதியுள்ளனர்.
நேற்று (23.11.2022) முதல் பெருந்திரளான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இறுதி நிகழ்வில் பங்கேற்று, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.








சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan