கனடா முழுவதும் திரண்ட புலம்பெயர்வோர்: நிரந்தரக் வதிவிடம் கோரி பேரணி - செய்திகளின் தொகுப்பு
கனடா முழுவதும் நேற்று, புலம்பெயர்தோர், ஆவணங்களற்றோர், மாணவர்கள் மற்றும் அகதிகள் தெருக்களில் திரண்டு பேரணிகளை நடத்தியுள்ளனர்.
இன்று பெடரல் நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில், நேற்று சாலைகளில் திரண்ட புலம்பெயர்தோர், ஆவணங்களற்றோர், மாணவர்கள் மற்றும் அகதிகள் முதலானோர், தங்கள் அனைவருக்கும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதியளிக்க கோரி பேரணிகளை நடத்தியிருந்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை "சமகால அடிமைத்தனத்தின் இனப்பெருக்கம் செய்யும் இடம்" என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் கூறியதை அடுத்து இந்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு