சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2 நாட்களில் முதல் தவணை நிதி! பீட்டர் ப்ரூயர்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள முதல் தவணை நிதி 2 நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் நிதி உதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில், சீர்திருத்த செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கியை மேலும் சுதந்திரமானதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையுடனான ஒப்பந்தத்தின் கீழ் இந்த நிதியை வழங்குவது, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், இது ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் நடைபெறும் என்றும் சர்வதேச நாணயம் நிதியம் தெரிவித்துள்ளது.
May you like this Video