நிதியுதவி கோராத போதும், இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்
IMF என்ற சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு ஒன்று டிசம்பர் 7 திகதி முதல் 20 வரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.
எனினும் தமது குழுவினர், இலங்கையுடன் 2021 ஆம் ஆண்டுக்கான பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் வழமையான ஆலோசனைகளை நடத்துவதற்காகவே இலங்கைக்கு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையிடம் இருந்து நிதி உதவிக்கான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட மசாஹிரோ நோசாகி கோரிக்கைகள் விடுக்கப்பட்டால், அது தொடர்பில் விவாதிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்துக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்டவர்கள், கோரிக்கை விடுத்துள்ள போதும் அரசாங்கம் அதனை நிராகாித்து வருகிறது
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri