இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல்
இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலில் உள்ளதாகவும் அது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்னும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட பணியாளர் மட்ட அளவிலான ஒப்பந்தத்தை தொடர்ந்து கடனை மறுசீரமைக்க இரு தரப்பு மற்றும் பல தரப்பு கடன் வழங்குநர்கள் உள்ளிட்ட கடன் வழங்குநர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
உடன்படிக்கைக்கு வந்த பின்னர் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்பு பொதியை பெற்றுகொள்ள முடியும்.
சாகல ரத்நாயக்க
இதற்கிடையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிட பிரதிநிதி உள்ளிட்டவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
மூன்று பேர் கொண்ட சர்வதேச நாணய நிதியக் குழு, சாகல ரத்நாயக்கவைச் சந்தித்து, முன் நடவடிக்கை மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது.
இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்த பின்ன்ர் அதற்கான தமது பதிலை தெரிவிப்பதாக இந்த கலந்துரையாடலின் போது சாகல ரத்நாயக்க சர்வதேச குழுவிடம் உறுதி அளித்துள்ளார்.