எரிபொருள் விலையை குறைக்க சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லை - அரசாங்கம்
இலங்கையில் எரிபொருள் விலையை மேலும் குறைக்க அரசாங்கம் விரும்புகின்றது ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகள் காரணமாக அது தற்போது சாத்தியமில்லை என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை குறைக்க அனைவரும் விரும்புகிறோம். ஆனால், தற்போது அது சாத்தியமில்லை.
நாங்கள் இன்னும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கிறோம். அரசின் வருமானம் மற்றும் செலவுகளை கவனமாக கணக்கீடு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மின்னுற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது புதுப்பிக்கத்தக்க சக்தி வளம் தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தைக் குறைக்க உதவும்," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் எரிபொருள் விலை லீற்றர் ஒன்று 10 ரூபாவினால், குறைக்கப்பட்டது. இதற்கு முன்பும் பலமுறை விலை குறைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக பரிரயளவில் விலைக்குறைப்பு செய்ய முடியாது," என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
