இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் வெளியான புதிய தகவல்
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான அங்கீகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தாமதமாகும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு 290 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஏற்கனவே ஊழியர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்களை உயர்த்தி சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை இலங்கை பூர்த்தி செய்ததன் பின்னர், நிதியத்தின் பணிப்பாளர் சபை இலங்கைக்கு கடன் தொகையை அங்கீகரிப்பது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த ஒப்புதலைப் பெற திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு இன்னும் ஒரு மாதம் தாமதமாகும்.
கடனுக்கான அனுமதி கிடைத்த பின்னர், கடனின் முதல் தவணையாக சுமார் 500 மில்லியன் டொலர்கள் முதற்கட்டமாக விடுவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.