ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள நிதி! உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான நிதி வசதி தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அமைச்சர், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
எனது தனிப்பட்ட கருத்து

அரசியலமைப்பின் பிரகாரம் பணத்தின் மீதான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. இதன் விசேட அம்சம் என்னவெனில் இலங்கையை 48 மாதங்களில் யார் ஆட்சி செய்தாலும் யார் ஆட்சியமைப்பது என்பது தொடர்பில் அரசியல் கருத்துக்கள் எதுவும் இன்றி இணக்கமான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் சர்வதேச ரீதியாக உலகை சமாளித்து இந்த நாட்டை நடத்த முடியாது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதா? தனி அரசியல் கட்சிக்கு எதிராக இருந்தால் இதை செய்யாமல் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து பதிவு செய்யப்பட்டால் முக்கியம் என நினைக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் அத்தகைய கருத்துக்கணிப்பு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்தாகும் என குறிப்பிட்டுள்ளார்.
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri