இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்கள்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மூன்றாவது தவணை நிதி கிடைக்கப்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
ஐஎம்எப் இன் இரண்டாவது மீளாய்வுக்கான அனுமதி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி கிடைத்துள்ளமை மகிழ்ச்சி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இதனூடாக 336 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகை எமக்கு கிடைக்கப்பெறும்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் எமது இலக்கு மட்டத்தை நாம் அடைந்ததை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டது. இந்த மாதம் மே மாதமளவில் பணவீக்கம் மேலும் குறைந்த மட்டத்தில் பேணப்பட்டமை ஆகியனவும் கருத்திற்கொள்ளப்பட்டன.
எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மூன்றாவது தவணை நிதி கிடைக்கப்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |