திறைசேரியை வந்தடைந்த சர்வதேச நாணய நிதியத்தின் கடன்தொகை
சர்வதேச நாணய நிதியத்தினால் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 695 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இலங்கையின் திறைசேரியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கீழ் உள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 5வது மற்றும் 6வது கடன் தவணைகளை வழங்குவதற்கான மீளாய்வுகள் கடந்த மே மாதம் 27ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்
கடன் தொகை
அதன்போது இலங்கை ஏலவே ஒப்புக்கொண்டுள்ள சில நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறி இருந்த நிலையிலும், தற்போதுள்ள உலகளாவிய நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு, மேலதிக நிபந்தனைகளுடன் கடன்தொகையை விடுவிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட செயற்குழு அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கீழ் உள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 5வது மற்றும் 6வது கடன் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இலங்கை திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri