இலங்கை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை: ஐஎம்எப் வலியுறுத்து
பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருதாக கூறப்படும் இலங்கையில், வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கணிசமான அளவு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சுமை குறைந்தப்பட்சம் தற்போது தொடர வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தின் பலதரப்பட்ட பிரிவினரால் இது தொடர்பாக அதிருப்திகள், கவலைகள் வெளியிடப்படுகின்றன.
வரிச்சுமை அவசியமானது
எனினும் நாடு மீண்டும் வீழ்ச்சியடையாமல் இருக்க, இலங்கை தற்போதைய மட்டத்தில் தொடர்ந்து வரிகளை சுமத்துவது இன்றியமையாதது என்று கடன் வழங்குபவரான சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு நிதியளிப்பதற்காக, இலங்கைக்கு முற்றிலும் புதியதல்ல. வரிச்சுமை அவசியமானது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்க குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி வசூலிப்பின் மூலமே அனைவருக்கும் பொதுவான பொருட்கள் வழங்கப்படுகின்றன.
டொலர் மதிப்பீடு
இந்தநிலையில் இந்த பொதுவான பொருட்களை அனைவரும் தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால், ஒவ்வொருவரும் அளவான பங்களிப்பை வழங்க வேண்டும். அதுவே நெருக்கடியின் மூல காரணங்களில் ஒன்றை நிவர்த்தி செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கணிசமான நெருக்கடியில் இருப்பதையும் உண்மையான வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளதையும் பிரேயர் ஒப்புக்கொண்டார்.
2022 இல் இலங்கை டொலர் மதிப்பின்படி, பொருளாதார நடவடிக்கையில் தமது ஆறில் ஒரு பங்கை இழந்தது, அதே நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் 15 சதவீதம் டொலர் மதிப்பீடு குறைந்துள்ளது.
என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவே, நிச்சயமாக, இலங்கை மக்கள் அந்த கட்டத்தை ஒவ்வொரு நாளும் உணர்கிறார்கள் என்றும் ப்ரூயர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
