"கடன் வசதியை பெற்றுக்கொள்ள 40 அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டும்"
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வசதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 40 அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பை வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உதவிகளை பெற கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெற வேண்டுமாயின் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ஜனாதிபதி கூறியதாகவும் கிரியெல்ல கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாற்றில் என்றுமில்லாத அளவிலான பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகிறது.
அத்துடன் நாட்டுக்கு கிடைத்து வருமான வழிகள் பாதித்துள்ளன. சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி துறை உட்பட பல தொழில் துறைகள் பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ளன.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
