அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை அவசரமாக சந்தித்த சர்வதேச நாணய நிதிய இயக்குநர்
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, இன்று (17.02.2026) டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாவதுரா கிராமத்திற்கு விஜயம் செய்தார்.
அப்பகுதியிலுள்ள பாதிக்கப்பட்டவர்களிடம் கலந்துரையாடிய நிலையில் அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார். இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளதாவது.
பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய விடயங்கள்
பாதிக்கப்பட்ட மக்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, அவர்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பேரழிவு சூழ்நிலையில் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட விரைவான நிவாரண நடவடிக்கைகள் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த அவர், மக்கள் காட்டிய எல்லையற்ற தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமையையும் பாராட்டினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம் உரையாற்றிய இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, இங்குள்ள இளம் குழந்தைகள் நாளை நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்வார்கள் என்று நம்புவதாகவும், அந்த இலக்கை அடைய குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க அரசாங்கம் கடுமையாக உழைக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
இந்த சந்திப்பில் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர், பேராசிரியர் சரத் அபேகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan