கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வு தடுக்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா(Photos)
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கிளநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றையதினம் (01.06.2023) கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தினூடாக வெளி மாகான வழியனுப்பத்திரத்தின் மூலம் மணல் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வெளிமாகாண அனுமதிப்பத்திரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகமாக சட்டவிரோத மண்ணகழ்வு இடம்பெறுவதாக பொது அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்த குற்றசாட்டு தொடர்பான இன்றைய கூட்டத்தொடரில் கலந்தாலோசிக்கப்பட்டது.
அனேகர் வெளிமாகாணத்தில் வழங்கப்படும் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தியே மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாகவும், ஏற்றிசெல்லப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவீரோத மண் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக இன்று முதல் வெளிமாகானங்களில் இருந்து கொண்டுவரப்படும் மணல்கள் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக கொண்டுசெல்லல் தடைசெய்யப்படுவதாகவும் உள்ளூரில் மணல் அகழ்வதற்கான அனுமதிபத்திரம் தற்காலிகமாக நிறுத்துவதற்கும் துறைசார் அதிகாரிகள், பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சட்டவிரோத மணல் அகழ்விற்கு பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்குவதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இந்த சட்டவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் பொலிஸார் இருப்பது என்பதை மக்கள் வெளிப்படையாகவே தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார்கள்.

ஆனால் அவர்கள் இந்த சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மாறாக இதை ஊக்குவிப்பவர்களாக இருக்கின்றமை வருத்தத்திற்குரிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்.
மின்னுற்பத்தி நிலையம்
இதனையடுத்து, அதாணி குடும்பத்தினால் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அபிவிருத்திக் கூழுவின் அனுமதிக்காக எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கௌதாரி முனைக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பில் சர்ச்சை எழுந்தது. குறித்த வீதியை காபெட் வீதியாக அமைப்பது தொடர்பில் எவ்வித உறுதிகளும் வழங்கப்படவில்லை.
இதேவேளை காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு இன்றைய கூட்டத்தில் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், செ.கஜேந்திரன் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.
மேவதிக செய்தி-யது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri