புலனாய்வுத்துறையின் இரகசிய தகவல்! காட்டுப் பகுதியில் சிக்கிய இருவர்
யாழ். துன்னாலை காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பில் 20,000 மில்லிலீற்றர் கசிப்பு, 540,000 மில்லிலீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனம் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் கைது
சம்பவம் தொடர்பில் துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்து தப்பியோடிய மிகுதி சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வந்துள்ளனர்.
இதேவேளை அண்மைக்காலங்களாக வடமராட்சி பிரதேசத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்