சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 38 இலங்கையர்கள் - விடுத்துள்ள அவசர கோரிக்கை
சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குச் செல்ல முயற்சித்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய தேசிய புலனாய்வு குழுவின் விசாரணையில் தாங்கள் ஆட்கடத்தல் காரர்களால் ஏமாற்றப்பட்டுள்ளவர்களாக உறுதி செய்யப்பட்டுள்ள போதும், தொடர்ந்தும் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குச் செல்ல முயற்சித்த நிலையில் 38 இலங்கையர்கள் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர்.

ஆட்கடத்தல் முகவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்

தமிழர் தாயக பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதுடன், ஆட்கடத்தல் முகவர்களால் தங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 பேரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐந்து பேரும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri