கனடா-அமெரிக்க எல்லையில் புலம்பெயர்வோருக்கு ஏற்பட்ட சிக்கல்! வெளியான காரணம்
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் சிலர் அவசர உதவிக்காக பொலிஸாரை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கனடா அமெரிக்க எல்லையிலிருந்து சிலர்,தாங்கள் கடுங்குளிர் காரணமாக ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நேற்று அதிகாலை 4.00 மணியளவில் அவசர உதவியை அழைத்துள்ளனர்.
மருத்துவ உதவிக்குழு
இதன் பின்னர் உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினருடன் அமெரிக்க பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.
மேலும் சட்டவிரோதமாக கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றவர்களே இவ்வாறு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த கூட்டத்தில் பத்து பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஒன்பது பேரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஒருவரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடும் பணியில் பொலிஸார்
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் குளிரால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறுபக்கத்தில், கனடா பொலிஸார் காணாமல் போன அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அந்த புலம்பெயர்வோர், எந்த நாட்டவர்கள் என்பது குறித்த விபரங்கள் தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.