பொரள்ளை கனத்தை விடுதியில் சட்டவிரோத மலர்ச்சாலை
கொழும்பு (Colombo) , பொரள்ளை கனத்தைக்கு உரிய உத்தியோகத்தர் விடுதியில் சட்டவிரோத மலர்ச்சாலையொன்றை நடத்தி வருவதை நாடாளுமன்ற பொது கணக்குகள் குழு கண்டறிந்துள்ளது.
பொரள்ளை கனத்தை மயானமானது, கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவர், கனத்தை உத்தியோகத்தர் விடுதியை பலவந்தமாக ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக மலர்ச்சாலையொன்றை நடத்தி வரும் தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது.
வழக்குப் பதிவு
குறித்த மலர்ச்சாலையின் ஏனைய தேவைகளுக்காக கனத்தையின் காணியிலும் குறிப்பிட்டத்தக்க அளவு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஊழியருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சட்டவிரோத மலர்ச்சாலையை அகற்றுமாறும் கொழும்பு மாநகர சபைக்கு நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எப்படி அரேஞ்ச் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டீங்க.. மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் Cineulagam
