யாழ்ப்பாண கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: இந்திய கடற்றொழிலாளர்கள் மீது குற்றச்சாட்டு

Indian fishermen Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Fisherman
By Erimalai Apr 12, 2026 07:48 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் எல்லை தாண்டி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளில் ஈடுபடுவதாக உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனைத் தடுப்பதில் கடற்படையினர் மெத்தனமாக செயல்படுகின்றனர் என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (10.04.2026) நாகர்கோவில் கிழக்கு திசையில், கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியைக் கண்டால் பதுங்கும் எதிர்க்கட்சியினர்! லக்மாலி ஹேமச்சந்திர எம்.பியின் கிண்டல்

ஜனாதிபதியைக் கண்டால் பதுங்கும் எதிர்க்கட்சியினர்! லக்மாலி ஹேமச்சந்திர எம்.பியின் கிண்டல்

இவர்கள் இந்தியப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ‘குல்லா’ எனப்படும் படகுகளில் வந்து, இலங்கைக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட ‘லாம்பு’ (Light Course) மீன்பிடி முறையில் ஈடுபட்டதை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் நேரில் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குறித்த அத்துமீறல்களை தமது கையடக்கத் தொலைபேசிகளில் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

உள்ளூர் கடற்றொழிலாளர்களின் குற்றச்சாட்டுகள்

இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த வடமராட்சி கடற்றொழிலாளர்கள் பின்வரும் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்,

யாழ்ப்பாண கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: இந்திய கடற்றொழிலாளர்கள் மீது குற்றச்சாட்டு | Illegal Fishing In Jaffna Waters

“நாங்கள் எமது கடற்பரப்பில் வாழ்வாதாரத்திற்காக தொழில் செய்யும்போது, சிறிய விதிமீறல்களைக் காரணம் காட்டி கடற்படையினர் எங்களை கைது செய்கின்றனர். ஆனால், எல்லை தாண்டி வந்து எமது வளங்களைச் சூறையாடும் இந்திய கடற்றொழிலாளர்களை அவர்கள் கவனிக்கவில்லை,” என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘லாம்பு’ மீன்பிடி முறை இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான முறைகள் கடல் வளங்களை முற்றாக அழிக்கும் அபாயம் உள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறல்களால் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வலைகள் சேதமடைவதோடு, அவர்களது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கோரிக்கை

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களைக் கட்டுப்படுத்தவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமராட்சி கிழக்கு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன், உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடற்படையினர் கடைப்பிடிக்கும் சட்டக் கட்டுப்பாடுகளை, எல்லை தாண்டி வரும் அந்நிய கடற்றொழிலாளர்கள் மீதும் சமமாகப் பயன்படுத்தி கடல் வளங்களையும் எல்லையையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

சிஐடி அலுவலகத்தில் அநுரவின் செயலாளர் - சிக்கப்போகும் முக்கிய புள்ளி..

சிஐடி அலுவலகத்தில் அநுரவின் செயலாளர் - சிக்கப்போகும் முக்கிய புள்ளி..


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US