சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தீவிரம்: சுட்டிக்காட்டும் ரவிகரன்
வடக்கின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும், கிழக்கிலும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தீவிரம் பெற்றிருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் திருட்டுக் கும்பலின் கொட்டத்தை அடக்கி மீனவ மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சட்டவிரோதமான கடற்றொழில் செயற்பாடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் கடல்வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான கடற்றொழில் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்று வருகின்றது.
கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் செயல்கள் கடுமையாக இல்லை. கடற்றொழில் அமைச்சரும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தும், இதுவரை நிலமைகள் சீராகவில்லை.
திண்டாட்டம்
கடற்தொழிலாளர்களோ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கடற்தொழிலாளர் குடும்பங்கள் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடு உட்பட, தமது அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர்.
சட்டவிரோதிகள் ஏதேனும் செல்வாக்குகளைப் பயன்படுத்தித்தான் இவ்வாறான அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரோ என்ற ஐயப்பாடு கடற்தொழிலாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 23 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
