பொதுக்கிணறு என்ற போர்வையில் சட்ட விரோத மண் அகழ்வு -மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பங்குடாவெளி பெரிய குளனி பகுதியில் பொதுக்கிணறு அமைப்பதாகத் தெரிவித்து மண் அகழ்வு இடம்பெறுவதாக அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதாகத் தேசிய குடிநீர் அதிகாரசபையின் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த கிணறு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இருந்தபோதிலும் மக்களின் எதிர்ப்பு காரணமாகக் குறித்த வேலைத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிணறு கட்டி முடித்தால் அப்பிரதேசத்தில் வாழும் 500 குடும்பங்கள் நீர் தட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் அதிக அளவு மண் அகழப்படுகின்ற போதிலும் கிணறு என்ற போர்வையில் மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri