கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செயற்கை கஞ்சா மற்றும் அம்பெடமைன் (Amphetamine) எனும் போதைப்பொருட்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று (27.07.2023) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 கிலோ எடையுள்ள செயற்கை கஞ்சா,ஹொங்கொங்கில் இருந்து டுபாய் ஊடாக கொழும்புக்கு விமானம் மூலம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
210 மில்லியன் ரூபா மதிப்பு
கடத்தப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமார் 210 மில்லியன் ரூபாய் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து பத்தரமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோசடியில் ஈடுபட்ட ரஷ்ய பிரஜை உட்பட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையிலும் ஏனைய நால்வர் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையிலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |