சட்டவிரோதமாக டீசல் கடத்தல்: பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட வாகனம்(Photo)
சம்மாந்துறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் வடி ரக வாகனமொன்றில் 18 கேன்களில் டீசலை கொண்டு செல்ல முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கி முற்றுகையிட்டுள்ளனர்.
எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
டீசல் கடத்தல்
இந்நிலையில் இன்று (28) நள்ளிரவு 12.30 மணியளவில் வடி ரக வாகனம் சம்மாந்துறை மணிக்கூட்டு கோபுரத்தால் கேன்களுடன் செல்வதை எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் அவதானித்தாக தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் வரும் போது சம்மாந்துறை மணிக்கூட்டு கோபுரத்தடியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் வாகனத்தை சுற்றிவளைத்து தடுத்து நிறுத்தி கேன்களை பரிசோதித்த போது சுமார் 18 கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்களுக்கும் வாகன சாரதிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
விசாரணை
பின்னர் பொது மக்கள் பொலிஸாருக்கு தகவலை வழங்கியதையடுத்து அங்கு வருகைதந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச் ஜெயலத் மற்றும் பொலிஸார் வடி ரக வாகனத்தை கைப்பற்றி அதில் உள்ள கேன்களில் டீசல் இருப்பதை உறுதிப்படுத்தி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு வடி ரக வாகனம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார்
ஆரம்பித்துள்ளனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
