சட்டவிரோதமான முறையில் கால்நடை கடத்தல்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை(Photos)
சட்ட விரோதமான முறையில் கால்நடைகளை கடத்தும் சம்பவங்கள் தற்பொழுது அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் ,முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமன்றி கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கி லொறி ஒன்றில் நேற்று இரவு (16.11.2023) மாடுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் முத்தையன்கட்டு பகுதியில் இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒட்டிசுட்டான் பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதி இல்லாமல் மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவரும் புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
,அத்துடன் அவர்களிடமிருந்து இரண்டுமாடுகளும், கன்று ஒன்றுமாக மூன்று மாடுகள் இறந்த நிலையிலும் , இரண்டு மாடுகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையிலும் ஏனைய இரண்டு மாடும் ஒரு கன்றுமாக மொத்தமாக 8 மாடுகளும் அவற்றை கடத்தி செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறி வாகனம் ஒன்றையும் ஒட்டிசுட்டான் பொலிஸாரால் கைப்பற்றினர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் வாகனத்தை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (16) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும், இறந்த மாடுகளை புதைப்பதற்கும், ஏனைய மாடு, கன்றினை ஒட்டுசுட்டான் விவசாய திணைக்களத்திற்கு கொடுக்குமாறும் நீதவானால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா
வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லபட்ட மாடுகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடுக்கந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி இன்று (16) காலை 5 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த சிறியரக லொறி ஒன்றினை வழிமறித்த விசேட அதிரடிப்படையினர் அதில் சோதனையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாடுகள் கடத்திச் செல்லப்பட்டமை தெரியவந்ததையடுத்து, குறித்த வாகனத்தில் இருந்தவர்களை கைது செய்த விசேட அதிரடிபடையினர் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன் வாகனத்தில் இருந்து 8 பசு மாடுகள் உட்பட 14 மாடுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், அவற்றை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யபட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி - திலீபன்








மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
