சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது (Photo)
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்று (18.12.2022) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்த 3 ஆண்களும் 2 பெண்களும் என
விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று (18.12.2022) தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சிறுவர் காப்பகத்தில்
இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு 16 வயது சிறுமியை சிறுவர்
நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.