யாழில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்திடம் உதவிகோரிய அரசாங்க அதிபர் (Photos)
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதை எடுத்துரைத்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (14.05.2023) இடம்பெற்ற புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட ராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சிக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,
பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் கால்நடைகள் வெட்டுதல்,மணல் கடத்தல் போன்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
மேலும் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பொருட்கள் களவாடப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே ராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
அளவீடு செய்யப்படாத காணிகள்
ராணுவத்தினர் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல அளவீடு செய்யப்படாது பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது.
குறித்த காணிகளையும் விரைவில் அளவீடு செய்யும் நடவடிக்கையில் உரிய சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இராணுவத்தினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
குறிப்பாக மீள்குடியேறிய மக்களுக்கு இராணுவத்தினரால் 700ற்கும் மேற்பட்ட வீடுகள் ராணுவத்தினரின் பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டுள்ள அதேபோல் எதிர்வரும் காலத்திலும் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என கோரியதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
