கொக்கட்டிச்சோலையில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு 06 பீப்பாய்களில் கோடா, கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மட்டக்களப்பு வாவியை அண்மித்த அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார் நேற்று (21.03.2025) சுற்றிவளைத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீப்பாய்கள்
இச்சுற்றிவளைப்பு தேடுதலின் போது 06 பீப்பாய்களில் ஆயிரக்கணக்கான மில்லி லீட்டர் கோடா மற்றும் கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இவ்வாறு இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பீப்பாய்கள், போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலையில் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






