மாங்குளத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் கூட்டத்தில் கட்டப்பட்டது ஈபிடிபி கொடியை ஒத்த கொடியா..!
இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டம் மாங்குளத்தில் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் தாங்கி வந்த கொடி குறித்து சமூக ஆர்வலர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.
அதாவது, ஈபிடிபி கட்சியின் கொடியினை ஒத்த வர்ணங்களே இலங்கை தமிழரசு கட்சியின் கொடியிலும் காணப்படுகிறது. ஆனால் அந்த நிறங்களின் ஒழுங்கில் மாற்றம் இருக்கிறது.
கொடிகளில் வித்தியாசம்..
ஈபிடிபி கட்சியின் கொடியானது முதலாவதாக பச்சை வர்ணத்தையும், இரண்டாவதாக சிவப்பு வர்ணத்தையும், மூன்றாவதாக மஞ்சள் வர்ணத்தையும் கொண்டதாக காணப்படும்.

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் கொடியின் நிறங்களின் ஒழுங்கமைப்பானது முதலாவதாக மஞ்சள் வர்ணத்தையும், இரண்டாவதாக சிவப்பு வர்ணத்தையும், மூன்றாவதாக பச்சை வர்ணத்தையும் கொண்டதாக காணப்படும்.
திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு சரியான ஒழுங்கிலேயே வர்ணங்கள் அமைந்திருந்தன.

ஆனால் மாங்குளத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில் ஈபிடிபியின் கட்சி கொடியின் வர்ண ஒழுங்கினை ஒத்த ஒழுங்கே காணப்பட்டது.

நாடுகளின் கொடிகளிலோ, கட்சிகளின் கொடிகளிலோ, வேறு அமைப்புக்களின் கொடிகளிலோ வர்ணங்களின் ஒழுங்கமைப்பை மாற்றும் முறை காணப்படுவதில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியானது இவ்வாறு ஒழுங்கினை மாற்றி கட்சி கொடியை அமைத்தமை சரியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri