கிளிநொச்சி- தருமபுரம் வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்த இளங்குமரன் எம்.பி
கிளிநொச்சி- தருமபுரம் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கேட்டு அறிந்துள்ளார்.
இன்றைய தினம் கண்டாவளை பிரதேசத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் குறித்த வைத்தியசாலையினுடைய நோயாளர் நலன்பு சங்கம் மற்றும் பொது மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வைத்தியசாலைக்குச் சென்று அங்கே இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
நடவடிக்கை
அத்துடன் வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடி உடனடியாக செய்ய வேண்டிய தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை தீர்த்து ஏனைய பிரச்சினைகளை அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் குறித்த வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்தியர் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
