இறுதி யுத்தத்தை நாடாளுமன்றில் நினைவுகூர்ந்த தமிழ் எம்.பி!
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில், தமிழ் மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கும், எமது தலைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறி நாடாளுமன்றில் நேற்று(06.12.2024) உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சுயலாப அரசியல்
''கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் தங்களின் சுயலாப நோக்கத்திற்காகவே செயற்பட்டனர்.
இதனால் எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டு, பெரும் சிக்கல்களை சந்தித்தனர்.
இந்தநிலையில், ஜனாதிபதி அவரது அக்கிராசன உரையில் சகல மக்களுக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும், நம்பிக்கையளிக்கும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த விடயம் பாராட்டத்தக்கது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
