இலங்கையில் அமைக்கப்படவுள்ள ஐஐடி தொழில்நுட்பக் கழகம்
ஐஐடி என்ற பிரபல இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மூன்றாவது கடல்சார் வளாகம் இலங்கையில் அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஐஐடி அமைப்பதற்கான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் கடந்த நவம்பரில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆதாரங்களின்படி, இந்த திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் ஐஐடி மெட்ராஸ் உடன் தொடர்பில் உள்ளது.
கண்டியில் வளாகம்
இதன்படி எதிர்கால திட்டம் பற்றி விவாதிக்க உயர்மட்டக் குழு சமீபத்தில் சென்னை வளாகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதன்படி, வளாகம் கண்டியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வளாகத்திற்கான திட்டம் நிறைவேறினால், அது, ஐஐடி மெட்ராஸின் இரண்டாவது சர்வதேச வளாகமாக இருக்கும். இந்தநிலையிலேயே ஐஐடியின் மூன்றாவது வளாகம்; இலங்கையில் அமைக்கப்படும் வாய்ப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
