நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல்: சட்டமா அதிபரின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸ் மா அதிபர்
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியின் சார்பாக, சட்டமா அதிபரின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நாளை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள இந்த வழக்கு தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க அரச சட்டத்தரணி ஒருவரும் ஈடுபடுவார் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் திருகோணமலையில் உள்ள இந்து கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பாரபட்சமற்ற விசாரணை
இந்த சம்பவத்தில் பொலிஸ் தரப்பு முறையாகவும் எந்த குறைபாடுகளும் இல்லாமல் செயல்பட்டார்களா என்பதை விசாரிக்கும் பொறுப்பு பொலிஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தற்போது பாரபட்சமற்ற விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam