7 வருடங்களுக்கு பின்னர் கல்முனையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
கல்முனை (Kalmunai) காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தின் வருடாந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 7 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது.
நேற்று (02) மாலை கல்முனை காணிப் பதிவக ஊழியர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில காணிப்பதிவக வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்வானது கல்முனை காணி மற்றும் மாவட்டப் பதிவாளர் தலைமையில் நடைபெற்றதுடன் இதன்போது கல்முனை காணிப் பதிவக உத்தியோகத்தர்கள் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் வரவேற்புரையினை மேலதிக காணிப் பதிவாளர் ஏ.எச்.எம்.பாஜித் மேற்கொண்டார்.
தொடர்ந்து தலைமையுரையினை காணிப் பதிவாளர் எஸ்.சுசிகரன் நோன்பின் மகிமை தொடர்பில் சிறப்பாக எடுத்துரைத்தார்.
இறுதியாக நன்றியுரையினை ஊழியர் நலன்புரி அமைப்பின் செயலாளர் யு.எல்.அப்துல் பாசித் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.