ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டால் பேராட்டம் வெடிக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணையின்றி ஆட்சியில் நீடிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தால் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு அனைத்து அரசியல்வாதிகளும் அடிபணிந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று நிலைமையோ அல்லது வேறும் காரணிகளுக்காகவோ அதிகாரத்தை நீடித்துக்கொள்ள அனுமதிக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிக் காலத்தை நீடிக்க வேண்டுமெனால் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதேச்சாதிகார முறையில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படாது என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri