மோசடி வாக்கு அளித்தால் விதிக்கப்படும் தண்டனை குறித்து எச்சரிக்கை
கள்ள வாக்கு அளித்தால் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மோசடியான முறையில் வாக்களித்தால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபடுவோருக்கான அபராதத் தொகை இரண்டு லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஓராண்டு காலம் சிறைத்தண்டனை
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு 23ம் இலக்க தேர்தல் விசேட சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியான முறையில் வாக்களிப்பவருக்கு முன்னதாக அபராதமாக ஐயாயிரம் ரூபா மட்டுமே விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
