ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என எச்சரிக்கை
ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிலுவைத் தொகை
அத்துடன், இந்த சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஸ்டாலின் கோரியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10000 ரூபா சம்பள அதிகரிப்பில், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 5000 ரூபா மட்டுமே கிடைக்கப் பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த நிலுவைத் தொகையான 15000 ரூபாவையும் எதிர்வரும் ஜனவரியில் வழங்கப்பட வேண்டுமென ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |