நான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் சென்றவர்களை அடித்து விரட்டியிருப்பேன்! மேர்வின் சில்வா
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது தான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியிருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சிங்கள மக்கள் போராட்டம் நடத்தும் போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் இவ்வாறு பேரணி செல்வதற்கு அனுமதிவழங்கியிருக்கின்றனர். குறித்த பேரணி இடம்பெற்ற இடத்தில் தான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியிருப்பேன்.
நாட்டில் அனைவரும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்கள் இது குறித்து விழிப்புடன் இருங்கள். இதற்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். யார் என்னை தடுக்கின்றார்கள் என்று பார்ப்போம்.
உங்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் ராஜபக்சர்கள் தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள். நான் ஒரு தூய சிங்கள பௌத்தன்.
இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
எனினும், அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
