நாட்டை பொறுப்பேற்று வழிநடத்த தயார் - திலித்
நாட்டை வழிநடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால், "இன்றே நாட்டைப் பொறுப்பேற்கத் தான் தயாராக இருப்பதாக" சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான துல்லியமான திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களிடம் இன்று பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால், அதை இன்றே ஏற்றுக்கொண்டு, இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதை நாங்கள் செய்து காட்டுவோம் என அவர் சவால் விடுத்துள்ளார்.

இலங்கை ரூபாய் மற்றும் அமெரிக்க டொலர் பரிமாற்ற விகிதத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மட்டுமே காரணம் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறையற்ற பொருளாதார நிர்வாகமும், நீண்டகால மூலோபாயத் திட்டங்கள் இல்லாததுமே இதற்குக் முதன்மைக் காரணம் என அவர் விமர்சித்துள்ளார்.
தற்போது நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை அல்ல, மாறாக தலைமைத்துவத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாததே ஆகும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடன் "நேர்மையான மற்றும் உண்மையான உரையாடலை" மேற்கொண்டு, இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முதல் படியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள் முதன்மைக் கணக்குப் உபரியைப் பராமரித்த போதிலும், பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், நாடு தற்போது இஞ்சியைக் கொடுத்துவிட்டு மிளகாயை வாங்கிய கதையாக மாறியுள்ளது என்று எச்சரித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை தற்போதைய தலைமைத்துவத்தால் போதிய பலத்துடனும் தெளிவான புரிதலுடனும் செயல்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சர்வஜன பலய என்பது ஒரு பாரம்பரிய அரசியல் தலைமைத்துவ மாதிரியைக் கொண்ட அமைப்பு அல்ல எனவும், இது தனிநபரை மையமாகக் கொண்ட அரசியலைத் தவிர்த்து, வலுவான குழுக்கள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரந்த இயக்கமாகும் என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam