எல்லையை மீறி செல்லும் தொழிற் சங்கங்களுக்கு அரசின் பலத்தை காட்ட வேண்டும்: ஆளும் தரப்பு எம்பி சர்ச்சை பேச்சு
ஏதேனும் ஒரு தொழிற்சங்கம் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணக்காது செயற்பட்டால், அரசாங்கத்தின் பலத்தை பயன்படுத்தி அந்த தொழிற்சங்கத்தின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க(S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
"இவ்வாறான தொழிற்சங்கங்களை அடக்காமல் இருந்திருந்தால், மகதீர் மொஹமட்டுக்கு மலேசியாவை செல்வந்த நாடாக மாற்ற முடியாமல் போயிருக்கும். சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தலைவர்களும் இதனையே கையாண்டனர்.
ஏதேனும் தொழிற்சங்கம் ஒன்று தனது எல்லையை மீறி செல்லுமாயின், அதனை நிறுத்த அரசாங்கம் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இது அடக்குமுறையாக இருக்கலாம். அச்சுறுத்தலாக இருக்கலாம். எனினும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
