நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கறுப்பு பூஞ்சை நோயுடன் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 'கறுப்பு பூஞ்சை' நோயுடன் கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் துணை இயக்குநர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி உட்பட பல மருத்துவமனைகளில் இருந்து இந்த தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இடங்களை பொறுத்து இந்த நோயின் அறிகுறிகள் உடலில் தோன்றுகின்றன. தோலில், கண்களைச் சுற்றி, மூக்கு, மூளை மற்றும் நுரையீரல்களில் இந்த பூஞ்சை தொற்று ஏற்படுகின்றது.
குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இந்த பூஞ்சைக்கு ஆளாகிறார்கள் என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நோய் ஒருவரில் இருந்து இன்னும் ஒருவருக்கு பரவாது என்றும் தொற்றுநோயாக மாற வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இருந்து கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட சாதாரண நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இருப்பினும், கோவிட் நோயாளிகள் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri